ஹெபடைடிஸ்-சி
பற்றி மேலும்
அறிக

நான் நன்றாக இருக்கிறேன்
என்றுப் பரிசோதனைச்
செய்து
உறுதிப்படுத்திக்
கொள்ளவும்

ஹெபடைடிஸ் சி-க்கு தடுப்பூசிகள் எதுவும் இல்லை ஆனால் சிகிச்சை உள்ளது1

ஹெபடைடிஸ் சி-ஆல் கல்லீரல் பாதிப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படலாம்2

சிகிச்சை ஹெபடைடிஸ் சி வைரஸை அகற்றலாம்3

கல்லீரலின் முக்கியத்துவம்4

கல்லீரல் மிகப்பெரிய உட்புற உறுப்பாகும் மேலும் நல்ல ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. கல்லீரல் 500-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை மேற்கொள்கிறது, இவைகள் உட்பட:

 • செரிமானத்தின் போது கொழுப்புகள் உடைப்பதை எளிதாக்கும், பித்த நீர் உற்பத்தி
 • உடல் முழுவதும் கொழுப்புகளை எடுத்துச்செல்ல உதவும், கொழுப்பு மற்றும் சிறப்பு புரதங்களின் உற்பத்தி.
 • இரத்த பிளாஸ்மாவிற்கான குறிப்பிட்ட புரதங்களின் உற்பத்தி.
 • அதிகப்படியான குளுக்கோஸை கிளைக்கோஜானாக மாற்றுதல் (ஆற்றல் சேமிப்பு).
 • குளுக்கொஸ் மற்றும் அமினோ அமிலங்களின் இரத்த அளவுகளின் ஒழுங்குமுறை
 • பல்வேறு மருந்துகள் கெடுதலான பொருட்களின் நச்சுக்களை இரத்தத்திலிருந்து வெளியேற்றுதல்.
 • ஹீமோகுளோபின் செயல்முறைப்படுத்துதல் மற்றும் இரும்புச்சத்து சேமிப்பு.
 • பல்வேறு உறைதல் காரணிகளை உற்பத்தி செய்வதன் மூலம் இரத்தம் உறைவதை எளிதாக்குதல்.
 • இரத்த ஓட்டத்திலிருந்து பாக்டீரியாவை நீக்கி குறிப்பிட்ட நோயெதிர்ப்பு காரணிகளை உற்பத்தி செய்வதன் மூலம் தொற்றுநோய்களுக்கு எதிராக போராடுவதில் உதவுதல்.

ஹெபடைடிஸ் என்றால் என்ன?

ஹெபடைடிஸ் என்றால் கல்லீரல் அழற்சி. அதிக அளவில் மது அருந்துதல், நச்சுக்கள், சில மருந்துகள் மற்றும் குறிப்பிட்ட மருத்துவ நிலைகளால் ஹெபடைடிஸ் ஏற்படலாம். எனினும், ஹெபடைடிஸ் பெரும்பாலும் ஒரு வைரஸ் மூலம் ஏற்படுகிறது2

ஹெபடைடிஸ் சி என்றால் என்ன?

ஹெபடைடிஸ் சி என்பது ஒரு வைரஸ், சுருக்குமாக ஹெச்.சி.வி. என்று அழைக்கப்படுகிறது.ஹெ.சி.வி கல்லீரலைப் பாதித்து ஹெபடைடிஸ் ஏற்படலாம்.கடுமையான ஹெபடைடிஸ் என்பது ஒரு பாதிக்கப்பட்டபின் முதல் 6 மாதங்களைக் குறிக்கிறது.2 கடுமையான ஹெ.சி,வி. உடன் இருக்கும் சுமார் 25% மக்கள் இந்த நேரத்தில் முழுமையாகக் குணமடைகிறார்கள்.5 கடுமையான தொற்றுநோய் தீவிரதன்மையில் சில அல்லது அறிகுறிகள் எதுவும் இல்லாமல் மிகவும் லேசான நோய் முதல் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய தீவிரமான நிலை வரை வேறுபடலாம்.2
கடுமையான ஹெச்.சி,.வி. உடன் இருக்கும் சுமார் 75% மக்களுக்கு நீண்ட கால அல்லது நாள்பட்ட ஹெச்.சி.வி. ஏற்படுகிறது.5 மருந்துகளால் வெற்றிகரமாக சிகிச்சையளிக்காவிட்டால், நாள்பட்ட ஹெ.சி.வி.- ஆல் ஈரலிரப்பு(வடு), கல்லீரல் புற்றுநோய், மற்றும் கல்லீரல் செயலழிப்பு ஏற்படலாம்.

இந்தியாவில் ஹெச்.சி.வி எவ்வளவு பொதுவானது?

இந்தியாவில் 100 நபர்களில் சுமார் ஒருவர் ஹெச்.சி.வி-ஆல் பாதிக்கப்படலாம். 2014 ஆம் ஆண்டில் 2,88,000 புதிய ஹெச்.சி.வி. தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளன என மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் ஹெச்.சி.வி. தொடர்பான இறப்புகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் 96,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.6-8

ஹே.சி.வி. உங்கள் கல்லீரலுக்கு என்ன பாதிப்பு ஏற்படுத்துகிறது?

ஹெ.சி.வி –ஆல் ஏற்படக்கூடிய தொடரான நோய்கள்

ஆரோக்கியமான கல்லீரல்

ஆரோக்கியமான கல்லீரல் பாதிப்படையும் போதெல்லாம் மீண்டும் வளரக்கூடிய, அல்லது மீண்டும் உருவாகக்கூடிய திறன் உடையது. இது உங்கள் இரத்தத்தை வடிகட்டி, ஊட்டசத்துக்களைச் செயல்முறைப்படுத்தி மேலும் தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராடச் செயல்படுகிறது.2,9

இணைப்புத் தசையழற்சி

கல்லீரல் நோயில், அழற்சியான கல்லீரல் வடு ஏற்படுத்துகிறது. இந்த வடு திசு வளர்ச்சியடைந்து ஆரோக்கியமான திசுவை மாற்றுகிறது. இந்த செயல்முறைதான் இணைப்புத் தசையழற்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த கட்டத்தில், உங்கள் கல்லீரல் ஆரோக்கியமான நிலையில் இருப்பதைப் போல நன்றாக வேலை செய்யாது.

ஈரலரிப்பு

ஈரலரிப்பு என்பது கல்லீரலில் வடுக்கள் ஏற்படுகின்றன இதில் கடினமான வடு திசு மென்மையான ஆரோக்கியமான திசுவை மாற்றுகிறது. இந்த கட்டத்தில் ஈரலரிப்புக்கு சிகிச்சையளிக்கப்டவில்லை என்றால் முறையாகச் செயல்படாமல் கல்லீரல் செயலிழக்கலாம்.9

புற்றுநோய்

ஹெபடோசெல்லுலர் கார்சினோமா (ஹெச்.சி.சி.) அல்லது கல்லீரல் புற்றுநோய் முதனிலை கல்லீரல் புற்றுநோயின் மிகவும் பொதுவான வகை. கல்லீரலில் தொடங்கும் புற்றுநோய் முதனிலை கல்லீரல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இது கல்லீரலில் ஆரோக்கியமற்ற செல்களின் வளர்ச்சி மற்றும் பரவல்.10

ஹெபடைடிஸ் சி வரும் ஆபத்து யாருக்கு இருக்கிறது?

தொற்றுநோயுடைய நபரின் இரத்தம் உங்கள் உடலில் நுழையும் போது உங்களுக்கு ஹெபடைடிஸ் சி ஏற்படலாம். இவ்வாறு ஏற்படலாம் நீங்கள்:

தொற்றுநோயுடைய நபருடன் மருந்து ஊசிகளைப் பகிர்ந்து கொண்டால்.2,11-13

ஹெபடைடிஸ் சி அல்லது மற்ற தொற்று நோயுகளுக்காக இரத்தம் வழக்கமாக சோதனை செய்யப்படாத போது, 2001 ஆம் ஆண்டிற்கு முன் இரத்தம் பரிமாற்றம் ஏற்பட்டிருந்தால்.sup>1,2,11-13

ஹெபடைடிஸ் சி இருக்கும் தாய்க்கு பிறந்திருந்தால் (தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவதற்கு 5% வாய்ப்பு உள்ளது).1,2,11-13

தொற்றுநோயுடைய நபருக்கு பயன்படுத்தப்பட்ட கிருமிகளை அழித்து சுத்தம் செய்யப்படாத கருவிகளால் பச்சைக்குத்தினால் அல்லது துளையிட்டால்.1,2,11-13

தொற்றுநோயுடைய நபருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசியால் தற்செயலாக குத்தி கொண்டால்.1,2,11-13

தொற்றுநோயுடைய ரேஸர் அல்லது டூத்பிரஷை பயன்படுத்தினால்.1,2,11

எப்போதாவது டயலிசிஸ் செய்து கொண்டீர்களா.2,12

எப்போதாவது சிறைசாலையில் வேலை செய்தீர்களா அல்லது இருந்தீர்களா. 2,12

அரிதாக, ஹெபடைடிஸ் சி பாலியல் முறையில் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.1,2,11-13

பொதுவான உணவுமுறை ஆலோசனை

உங்கள் உணவுமுறையில் இவைகள் உள்ளடங்கிய வழக்கமான சமச்சீரான உணவை சேர்க்கவும்:14

 • முழு தானிய ரொட்டி மற்றும் தானியங்கள்
 • இறைச்சி, மீன், கொட்டைகள், முட்டை மற்றும் பால் பொருட்கள் போன்ற போதுமான புரதசத்து நிறைந்த உணவுகள்
 • அதிக அளவிலான பழங்கள் மற்றும் காய்கறிகள்
 • நிறையத் தண்ணீர் (ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 6 முதல் 8 கிளாஸ்கள்).

இவைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அல்லது தவிர்க்கவும்:

 • உணவில் அதிகப்படியான உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு
 • மது அருந்துதல்.

ஹெபடைடிஸ் சி எப்படி பரவாது?

தொற்றுநோயுடைய நபரின் கைகளைப் பற்றுதல் அல்லது குலுக்குதல்1,15-16

தாய்பால் உணவு அல்லது தண்ணீர் வழியாக1,15

இருமல் மற்றும் தும்மல்1-16

நீச்சல் குளங்கள் அல்லது நீராவிக்குளியல் இடங்களைப் பகிர்ந்து கொண்டு பயன்படுத்துதல்1-16

கட்டித்தழுவுதல், முத்தமிடுதல் மற்றும் கட்டியணைத்துக் கொஞ்சுதல்1-16

அதே பாத்திரங்கள் மற்றும் வெட்டும் கருவிகளைப் பகிர்ந்து கொள்தல், அதே கிளாசிலிருந்து குடிப்பது1-16

கழிவறைகள் மற்றும் குளியலறைகளைப் பகிர்ந்து கொள்தல்1-16

துணிகளைப் பகிர்ந்து கொள்தல்1-16

எனக்கு ஹெச்.சி.வி. உள்ளதா என்று எனக்கு எப்படித் தெரியும்?

உங்களுக்கு ஹெச்.சி.வி உள்ளதா தெரிந்து கொள்வதற்கான ஒரே வழி சோதனை செய்து கொள்தல். மருத்துவர்கள் இரண்டு வகையான சோதனைகளைப் பயன்படுத்தி ஹெச்.சி.வி – யை கண்டறிகிறார்கள்.2,11

 • a. ஆன்டிப்பாடிக்கான இரத்தத்தைச் சரிபார்க்கும் சோதனைகள் - வைரஸ் காரணமாக நோயெதிர்ப்பு அமைப்பால் உருவாக்கப்பட்ட புரதங்கள்.2-11
 • b. ஆர்.என்.ஏ என்று அழைக்கப்படும் பொருளுக்காகச் சரிபார்க்கும் சோதனைகள் வைரஸ் மூலமாக உருவாக்கப்பட்டவை.2-11

எதிர்மறையான ஆன்டிபாடி சோதனை இருக்கும் பெரும்பாலமானவர்களுக்கு ஹெச்.சி.வி இல்லை மேலும் கூடுதலான சோதனை தேவையில்லை.

பொறுப்பு துறப்பு:

ஹெபடைடிஸ் தொடர்பான தகவல் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கான நோக்கங்களுக்கு மட்டுமே இங்குத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனான எந்தவொரு குறிப்பும் / அல்லது தொடர்பும் மைலானின் ஒப்புதல் அல்லது உத்தரவாதத்தை ஏற்படுத்தாது.இங்கு உள்ள தகவல்கள் துல்லியமானவை மற்றும் புதுப்பித்தவை என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டாலும், மைலான் எந்தவொரு பிரதிநிதித்துவத்தையும் செய்யவில்லை அல்லது இங்கு விவரிக்கப்பட்டுள்ள செய்திகளின் மூலம் பரப்பப்படும் எந்தவொரு தகவலின் துல்லியத்திற்கும் எந்தவொரு பொறுப்பையும் ஏற்காது, எந்தவொரு பிழை, விடுபடுதல் மற்றும் விளைவுகளுக்கு மேலும் அது பொறுப்பேற்காது - சட்டப்பூர்வமாக அல்லது வேறுவிதமாக, இங்கு வழங்கப்பட்ட எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவதால் எழும் மற்றும் அங்கிருந்து எழும் எந்தவொரு பொறுப்புகளையும் வெளிப்படையாக பொறுப்புத் துறக்கிறது.

ஹெபடைடிஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.உங்களுக்கு வழிகாட்டுவதற்கு உங்கள் மருத்துவர் தான் சிறந்த நபர். இங்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் உங்கள் மருத்துவர் சொல்லும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது.

References:

 1. 1. NHS Hepatitis C Symptoms. Available from: http://www.nhs.uk/Conditions/Hepatitis-C/Pages/Symptoms aspx. Accessed on 22nd February 2015.
 2. 2. CDC, Hepatitis C General information. Available from: http://www.cdc.gov/hepatitis/HCV/PDFs/HepCZGeneralFactSheet.pdf. Accessed on 22nd March 2015.
 3. 3. Treatment of Hepatitis C Up to date. Available at https://www.uptodate.com/contents/hepatitis-c-beyond-thebasics#H17555986. Accessed on 17th Dec 2018.
 4. 4. Health library. Liver Anatomy and Functions. Johns Hopkins Medicine. Available at https://www.hopkingmedicine.org/healthbrary/conditions/liverbillary_and_pancreatic_disorders/liver_anatomy_and_functions_85,P00676. Accessed on 26th Dec. 2018.
 5. 5. Behzad Hajarizadeh, Jason Grebely. Gregory J. Dore. Epideminology and natural history of HCV infection. Nat Rev Gastroentrola Hepatol 2013;10(9):553-62.
 6. 6. Puri P. Anand AC, Saraswat VA, Acharya SK, Dhiman RK, Aggrawal R. et. at. Consensus Statement of HCV Task Force of the Indian National Association for Study of the Liver (NASL). Part I: Status Report of HCV infection in India. J Clin Exp. Hepatol 2014;4(2):106-116.
 7. 7. Dhiman RK. Future of therapy for Hepatitis C in India. A matter of Accessibility and Affordibility ? J Clin Exp Hepatol 2014:4(2) 85-6.
 8. 8. Amirthalingam R and Pavalakodi VN. Prevalence of HIV 1, HCV and HBV infections among inhabitants in Chennai City at Hi-tech Center, Tamil-Nadu-India Medical Science 2013;3(8)24-28.
 9. 9. The progression of Liver Disease. American Liver Foundation. Available at https://liverfoundation.org./forpatients/about the-river/the-progression-of-river-disease/#1503432164252-f19f7e9c-0374. Accessed on 20th Dec 2018.
 10. 10. Liver Cancer American Liver Foundation. Available at https://liverfoundation.org/for/patients/about-the-river/disease-of the liver/liver-cancer/ Accessed on 20th Dec 2018.
 11. 11. Chopra S. Patient education: Hepatitis C (Beyond the Basics) Up To Date. Available from http://www.uptodate.com/contents/hepatitis-c-beyond-the basics. Accessed on 22nd March 2015.
 12. 12. NIH. What I need to know about Hepatitis C. Available from http://www.niddk.nih.gov/health/information/health - topics/liver-disease/hepatitis-c-Pages/ez.aspx. Accessed on 22nd March 2014.
 13. 13. CDC Hepatitis C Information for the Public. Available from : http://www.cdc.gov/hepatitis/c/cfaq.htm.
 14. 14. Viral Hepatitis, Diet and Nutrition: Entire Lesson. United States Department of Veterans Affairs. Available at https://www.hepatitis.va.gov/patient/daily/diet/single-page.asp. Accessed on 26th Dec 2018.
 15. 15. Hepatitis C. Key Facts World Health Organization, Retrieved from https://www.who.int/news-room/factsheets/detail/hepatitis-c. Accessed on 11th Dec 2018.
 16. 16. How hepatitis C is not transmitted. Hepatitis C: Transmission and prevention. infohep. Available at http://www.infohep.org/How-hepatitis-C-is-not-transmitted/page/2620968. Accessed on 11th Dec. 2018.