கடுமையான ஹெபடைடிஸ் பி என்பது ஒரு குறுகிய கால தொற்றாகும். இது ஒருவருக்குத் தொற்று ஏற்பட்ட முதல் ஆறு மாதங்களில் ஏற்படுகிறது. இந்த தொற்றின் தீவிரம் ஒரு சில அறிகுறி அல்லது எந்த அறிகுறியும் இல்லாத, லேசாக நோய்வாய்ப்படுதலிலிருந்து, மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு மோசமானதாகவும் இருக்கலாம்.1
நாள்பட்ட ஹெபடைடிஸ் பி என்பது வாழ்நாள் முழுக்க ஹெபடைடிஸ் பி வைரஸால் நோய்வாய்ப்படுதல், ஹெபடைடிஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்ட 90% குழந்தைகளுக்கு இது நாள்பட்ட தொற்றாக மாறுகிறது. விரைவில் நாள்பட்ட ஹெபடைடிஸ் பி தொற்று, கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் அழற்சி, கல்லீரல் புற்றுநோய், போன்ற பல்வேறு தீவிர பிரச்சனைகளாக மாறி, மரணத்தையும் ஏற்படுத்தலாம்.1
இந்தியாவில் ஹெபாடிடிஸ் பி தொற்றுநோய் எந்த அளவிற்கு பரவி இருக்கிறது?
ஹெபடைடிஸ் பி வைரஸ் (ஹெபிவி) நோயால் உலகளவில் சுமார் 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 30% பேர் ஹெச்பிவி தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள், முக்கியமாகப் பழங்குடி மக்களிடையே இது அதிகம் பரவுகிறது. 1.25 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 37 மில்லியன் மக்களுக்கும் மேலாக ஹெச்பிவி தாக்குதலுக்கு உள்ளாகி ஹெச்பிவி சுமையில் பெரும்பங்கு வகிக்கின்றனர்;.2
ஹெபடைடிஸ் பி எதனால் உருவாகிறது?
ஹெபாடிடிஸ் பி வைரஸ் ஹெபடைடிஸை உருவாக்குகிறது. ஹெபடைடிஸ் பி வைரஸ், அந்நோய்த் தொற்று ஏற்பட்டவரின் இரத்தம், விந்து அல்லது இதர உடல் திரவங்களின் தொடர்பால் பரவுகிறது. கீழ்கண்டவற்றால் தொடர்பு ஏற்படலாம்3
- ஹெபடைடிஸ் பி உள்ள தாய்க்கு பிறப்பதால்
- தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வது
- மருந்து ஊசிகள் அல்லது இதர மருந்து பொருட்களை தொற்று உள்ளவருடன் பகிர்வது.
- தொற்று உள்ளவர் பயன்படுத்திய ஊசியை எதிர்பாராதவிதமாக குத்திக்கொள்வது
- தொற்று உள்ளவருக்கு பயன்படுத்திய, தொற்று நீக்கப்படாத, வைரஸ் மற்றும் இதர நுண்ணியிரிகள் அழியும் வண்ணம் சுத்தம் செய்யப்படாத கருவிகளைக்கொண்டு பச்சை குத்திக்கொள்ளுதல்.
- தொற்று உள்ளவரின் இரத்தம் அல்லது திறந்த புண்களைத் தொடுதல்.
- தொற்று உள்ளவரின் ரேஸர், டூத் பிரஷ் அல்லது நகவெட்டியைப் பயன்படுத்துதல்
ஹெபடைடிஸ் பி எப்படி குணப்படுத்தப்படுகிறது?
தீவிர ஹெபடைடிஸ் பி உள்ளவர்களுக்கு, மருத்துவர்கள் பொதுவாக, ஓய்வு, தேவையான ஊட்டச்சத்து, திரவங்கள் மற்றும் நல்ல மருத்துவ கண்காணிப்பைப் பரிந்துரைப்பார். சிலருக்கு மருத்துவமனையில் சேர்ப்பது தேவைப்படலாம். நாள்பட்ட ஹெபடைடிஸ் பி உள்ளவர்களுக்குக் கல்லீரல் பிரச்சனை மதிப்பீடு மற்றும் தொடர்ந்த கண்காணிப்பு தேவைப்படும். கல்லீரல் நோயைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் சிகிச்சைகள் உள்ளன1
எனக்கு ஹெபடைடிஸ் பி இருக்கிறது என்பதை எப்படி அறியலாம்?
உங்களுக்கு ஹெபடைடிஸ் பி உள்ளதா என்பதை உங்கள் மருத்துவ மற்றும் குடும்ப வரலாற்றின் மூலமும், உடல் பரிசோதனை மூலமும், இரத்த பரிசோதனை மூலமும் மருத்துவர்கள் கண்டறிவார்கள். உங்களுக்கு ஹெபாடிடிஸ் பி இருந்தால், உங்கள் மருத்துவர் ட்ரான்சியண்ட் எலாஸ்டோகிராபி, கல்லீரல் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மற்றும் கல்லீரல் பயாப்சி போன்ற சோதனைகள் செய்வார்கள்.3
ஹெபடைடிஸ் பி யை தடுக்க இயலுமா?
ஆம். ஹெபடைடிஸ் பி யை தடுக்க சிறந்த வழி தடுப்பூசி போட்டுக்கொள்வது. ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, 6 மாதங்களுக்கு 3 தொடர் ஊசிகளாகத் தரப்படும். நீண்ட கால பாதுகாப்புக்கு இந்த முழு தொடர் தடுப்பூசி தேவை.1
உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்
கவனிக்கவும்: உங்கள் மருத்துவரே உங்களுக்கு வழிகாட்ட சிறந்த நபர் ஆவார். இந்த கற்பிக்கும் ஏட்டில் உள்ள தகவல் உங்கள் மருத்துவர் தரும் ஆலோசனைக்கு ஒரு மாற்று அல்ல. உங்கள் மருத்துவ நிலை குறித்து உங்களுக்குத் தெரிய உங்கள் மருத்துவரையோ அல்லது தகுதி வாய்ந்த சுகாதார வழங்குநரையோ கேளுங்கள்.
பொறுப்பு துறப்பு:
ஹெபடைடிஸ் தொடர்பான தகவல் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கான நோக்கங்களுக்கு மட்டுமே இங்குத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனான எந்தவொரு குறிப்பும் / அல்லது தொடர்பும் மைலானின் ஒப்புதல் அல்லது உத்தரவாதத்தை ஏற்படுத்தாது.இங்கு உள்ள தகவல்கள் துல்லியமானவை மற்றும் புதுப்பித்தவை என்பதை உறுதிப்படுத்த ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டாலும், மைலான் எந்தவொரு பிரதிநிதித்துவத்தையும் செய்யவில்லை அல்லது இங்கு விவரிக்கப்பட்டுள்ள செய்திகளின் மூலம் பரப்பப்படும் எந்தவொரு தகவலின் துல்லியத்திற்கும் எந்தவொரு பொறுப்பையும் ஏற்காது, எந்தவொரு பிழை, விடுபடுதல் மற்றும் விளைவுகளுக்கு மேலும் அது பொறுப்பேற்காது - சட்டப்பூர்வமாக அல்லது வேறுவிதமாக, இங்கு வழங்கப்பட்ட எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவதால் எழும் மற்றும் அங்கிருந்து எழும் எந்தவொரு பொறுப்புகளையும் வெளிப்படையாக பொறுப்புத் துறக்கிறது.
ஹெபடைடிஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.உங்களுக்கு வழிகாட்டுவதற்கு உங்கள் மருத்துவர் தான் சிறந்த நபர். இங்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் உங்கள் மருத்துவர் சொல்லும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது.